/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காவல் நிலையங்களில் நிலுவை மனு மீதான விசாரணை முகாம்
/
காவல் நிலையங்களில் நிலுவை மனு மீதான விசாரணை முகாம்
காவல் நிலையங்களில் நிலுவை மனு மீதான விசாரணை முகாம்
காவல் நிலையங்களில் நிலுவை மனு மீதான விசாரணை முகாம்
ADDED : நவ 10, 2024 06:50 AM

பண்ருட்டி : பண்ருட்டி உட்கோட்ட காவல் துறை சார்பில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காணும் முகாம் பண்ருட்டியில் நடந்தது.
பண்ருட்டி உட்கோட்டம் காவல் சரகத்தில் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திட நேற்று மனுக்கள் விசாரித்து தீர்வு காணும் முகாம் பண்ருட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
டி.எஸ்.பி., ராஜா தலைமையில் மனுக்கள் குறித்து மனுதாரர், எதிர்மனுதாரர்கள் வரவழைக்கப்பட்டு 100 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், வேலுமணி, ரவிச்சந்திரன், அசோகன், சப் இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், ஜெய தேவி, சரண்யா, பிரகாஷ், முகில் அரசு, தெய்வநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர்.