/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலெக்டர் ஆபீஸ் அருகில் பூங்கா பணிகள் ஆய்வு
/
கலெக்டர் ஆபீஸ் அருகில் பூங்கா பணிகள் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2025 11:16 PM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் அருகே பூங்கா அமைக்கப்பட உள்ளதை தோட்டக்கலை துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கடலுார் கலெக்டர் அலுவலகம் அருகே குண்டு சாலை பகுதியில் மருதம் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இங்கு, மேற்கொள்ள வேண்டிய உட்கட்டமைப்பு பணிகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் கிராமத்தின் முந்திரி சிறப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் வேகாக்கொல்லை கிராமத்தில் பலா சிறப்பு மைய பணிகளையும் ஆய்வு செய்தார்.
வடலுாரில் தோட்டக்கலைத் துறை சார்பில் அமைக்கப்படும் பூங்கா பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தோட்டக்கலை துணை இயக்குனர் அருண், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் உடனிருந்தனர்.