ADDED : டிச 08, 2025 06:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை புறவழிச்சாலை, மங்கலம்பேட்டையில் ஆதிசக்தி பீடம் ஆன்மிக குழு சார்பில், 18 அடி உயர விஸ்வரூப அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்க்கை அம்மன் சிலையுடன், திருக்கோவில் அமைய உள்ளது.
இந்த நுாதன சிலை கருகோல வழிபாடு, சமீபத்தில் நடந்தது.
ஆதிசக்தி நிரந்தர பீடத்தில் துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
முன்னதாக, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜை செய்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

