ADDED : மே 18, 2025 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு கிராம வங்கியின் நெய்வேலி இந்திரா நகர் கிளையில், இறந்த வாடிக்கையாளரின் வாரிசுதாரருக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு கிராம வங்கி, நெய்வேலி இந்திரா நகர் கிளையின் வாடிக்கையாளர் ஜம்புலிங்கம். இவர் பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா மற்றும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் பணம் செலுத்தினார்.
சமீபத்தில் இவர் இறந்ததை அடுத்து அவரது அனைத்து காப்பீட்டுக்கும் வாரிசுதாரரான அவரது மனைவியிடம் கிளை மேலாளர் அருட்செல்வி பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய், ஏ.பி.ஓய்.,திட்டத்தின் கீழ் 10,226 ரூபாய் பணத்தை வழங்கினார். துணை மேலாளர் ராஜதிலக், காசாளர்கள் சுபத்ரா, சுவர்ணலதா உடனிருந்தனர்.