/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பன்னீர் கரும்பு கொள்முதல் கடலுார் பகுதிகளில் தீவிரம்
/
பன்னீர் கரும்பு கொள்முதல் கடலுார் பகுதிகளில் தீவிரம்
பன்னீர் கரும்பு கொள்முதல் கடலுார் பகுதிகளில் தீவிரம்
பன்னீர் கரும்பு கொள்முதல் கடலுார் பகுதிகளில் தீவிரம்
ADDED : ஜன 10, 2025 06:31 AM

கடலுார்: பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க கடலுார் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பன்னீர் கரும்புகள், அரசு சார்பில் கொள்முதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் பத்திரக்கோட்டை, சத்திரம், கோரணப்பட்டு, குமளங்குளம், சின்னதானங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் பன்னீர் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவசமாக பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்படுகிறது. நேற்று முதல் ரேஷன் கார்டுகளுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணியில், வேளாண் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடலுார் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பன்னீர் கரும்புகள், கொள்முதல் செய்து இம்மாவட்டத்திற்கு மட்டுமின்றி, வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.