/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டி
/
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டி
ADDED : செப் 25, 2025 03:45 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் துவக்க விழா நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை வளாகத்தில் கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கபடி விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டியில், கடலுார், விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து அண்ணாமலை பல்கலைகழகத்தின் இணைவு கல்லுாரிகளின் கபடி அணிகள் பங்கேற்று விளையாடினர்.
இதில் 34 அணிகள் பங்கேற்ன. மேலும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் சார்பில், தென்னிந்திய பல்கலைகழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், பங்கேற்பதற்கான அணி தேர்வும் நடக்கிறது.
கபடி போட்டி துவக்க விழாவிற்கு கல்வி புல முதல்வர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். உடற்கல்வித்துறை தலைவர் சிவக்குமார் வர வேற்றார்.
முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்கான கன்வீனர், காட்டுமன்னார் கோவில் அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் உடற்கல்வித்துறை இணை இயக்குனர் வெங்கடாசலபதி, பேராசிரியர்கள் சுப்பிரமணியன், பாலமுருகன், பொன்சன், உதவி பேராசிரியர் சேவி மற்றும் பெண்கள் கன்வீனர் பானுபிரியா மற்றும் இணைவு கல்லுாரிகளைச் சேர்ந்த உடற்கல்வி இயக்குனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.