/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் பல்கலையில் சர்வதேச மாநாடு; பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் பங்கேற்பு

ADDED : பிப் 01, 2025 12:18 AM

சிதம்பரம்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழல் மூலம் மரபணு பாதிக்கப்படுவது தொடர்பான சர்வதேச மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உயிர்வேதியியல் மற்றும் உயிரிதொழில் நுட்பவியல் துறையில், சர்வதேச அளவிலான மூன்று நாட்கள் மாநாடு இந்தியாவின் சுற்றுச்சூழல் மரபணு மாற்ற சங்கத்தின் 50வது ஆண்டையொட்டி நடத்தப்பட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் அருட்செல்வி மாநாட்டை துவக்கி வைத்தார். பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
துவக்க விழாவில், வியன்னா மருத்துவ பல்கலைக்கழக சிக்பிரைட் க்னாஸ்முல்லர், இங்கிலாந்தின் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து மைக்கல் ரவுட்லெட்ஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அமெரிக்கா, ஆஸ்திரியா, இங்கிலாந்து, இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டு ஆராய்ச்சி முடிவுகள் குறித்து விவாதித்தனர். சங்கத்தின் சார்பில் பானி பந்தன கங்குலி, தேவஷிஷ் ரத் ஆகியோர் பங்கேற்றனர்.
அறிவியல் முதல்வர் ஸ்ரீராம், துறைத் தலைவர் மனோகரன் சிறப்புரையாற்றினர். ராஜேந்திர பிரசாத், மணிவாசகம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.