/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலையில் பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு
/
அண்ணாமலை பல்கலையில் பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு
ADDED : ஜூலை 27, 2025 11:14 PM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு துவங்கியது.
தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை, தமிழிசைக் கல்வி ஆராய்ச்சி கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
துணைவேந்தர் ஒருங்கி ணைப்புக்குழு உறுப்பினர் அருட்செல்வி வரவேற்றார். முன்னாள் அரசு செயலர் தனவேல் பேசினார்.
தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் புருஷோத்தமன் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார்.
பத்மஸ்ரீ விருதாளர் சீர்காழி சிவசிதம்பரம், கலைமாமணி பக்தவத்சலம், சினிமா இயக்குநர் கவுதம் ஆகியோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய 17 இசைக் கல்லுாரி மாணவர்களுக்கு நாதஸ்வரம், தவில், வயலின் வழங்கி பேசினர்.
தொடர்ந்து, தமிழ்க் கீதவர்ணங்கள், தமிழிசைப் பா டல்கள், திருப்புகழ் ஆகிய இசைப்புத்தகங்கள் வெளியிட்டனர். தக்கேசி மற்றும் தருமபுரம் ஞானப்பிரகாசம் ஆகியோருக்கு 'முதுபெரும்பாணர்' எனும் விருதும், சேஷாத்திரிக்கு 'பெரும்பாணர்' விருதும், பொன்முடிப்பும் வழங்கப்பட்டது. வரும் 31 ம் தேதி வரை , மாநாடு நடக்கிறது.
பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் சுதர்சன் நன்றி கூறினார்.

