/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
/
என்.எல்.சி., நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
ADDED : செப் 18, 2025 03:54 AM

நெய்வேலி: என்.எல்.சி., இந்தியா நிறுவனம் சர்வதேச திட்ட மேலாண்மை சங்கத்தின் 'டெல்டா நிலை -3' சான்றிதழ் பெற்று, உலக அளவில் புதிய சாதனையை படைத்துள்ளது.
சர்வதேச திட்ட மேலாண்மை சங்கத்தின் தேசிய மற்றும் சர்வதேச மதிப்பீட்டாளர்களால் துல்லியமான மதிப்பீடு செய்யப்பட்டு, என்.எல்.சி.,க்கு உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த சாதனை குறித்து என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறியதாவது:
இது என்.எல்.சி., நிறுவனத்தின் திட்ட மேலாண்மை அமைப்புகளுக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல; ஊழியர்களின் அர்ப்பணிப்பு, விரைவான செயல்பாடு மற்றும் தொழில்முறை திறனுக்கு கிடைத்த சான்றாகும். இந்த வெற்றி, உலகத் தரத்திற்கு இணையாக திட்ட நிர்வாகத்தில் என்.எல்.சி., நிறுவனத்தை ஒரு தேசிய அளவிலான முன்மாதிரியாக நிலைநிறுத்துகிறது. சரியான நேரத்தில், நிலைத்தன்மையுடன் திட்டங்களை செயல்படுத்துவதில் எங்களின் உறுதிப்பாட்டை இது மேலும் வலுப்படுத்துகிறது. வரும் 2030ம் ஆண்டிற்குள் 20 ஜிகாவாட் மின் உற்பத்தி மற்றும் 100 மில்லியன் டன் ஆண்டுக்கு சுரங்கத் திறன் என்ற இலக்கை என்.எல்.சி., அடையும் வகையிலான ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.