/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
/
மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
ADDED : செப் 29, 2025 12:49 AM

கடலுார்: கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் 'தமிழர் பண்பாட்டு வரலாறு' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.
தமிழ்த்துறை தலைவர் மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் சபினாபானு தலைமை தாங்கினார்.
கடலுார் சிறப்பு மாவட்ட நீதிபதி பிரகாஷ் கருத்தரங்க ஆய்வுக்கோவையினை வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பாரி, கருணாநிதி, ரவி கோவிந்தராஜ், இணை பேராசிரியர் கமலாமுருகன் வாழ்த்திப் பேசினர். பேராசிரியர் விஜயலட்சுமி, விரிவுரையாளர் திலீபன் பேசினர்.
நிறைவு விழாவில், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.
மதுரை காமராஜர் பல்லைக்கழக இணை பேராசிரியர் நெல்லையப்பன், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.