/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் நேர்காணல் முகாம்
/
அரசு கல்லுாரியில் நேர்காணல் முகாம்
ADDED : பிப் 18, 2024 12:10 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், மாணவர்களுக்கான, வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜவேலு துவக்கி வைத்தார். பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மைய அலுவலர் பரமசிவம் வரவேற்றார். இதில், துறை தலைவர்கள் தமிழரசி, அண்ணாமலை, நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தமிழ் வேல், பேராசிரியர் இளையராஜா, பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மைய உதவி அலுவலர் விஜயகாந்த் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
முகாமில், விமல் அவுட்சோர்சிங் நிறுவனம், பி.வி.ஆர்., சொல்யூஷன் நிறுவனம், எஸ்.எஸ்.எஸ்., அகாடமி மற்றும் யமஹா, ஐ போன் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், 390 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கல்லுாரி முதல்வர் ராஜவேலு பணி ஆணை வழங்கினார்.