/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமூக வலைதளத்தில் பேட்டி வைரல்: ரயில்வே கேட் கீப்பருக்கு நோட்டீஸ்
/
சமூக வலைதளத்தில் பேட்டி வைரல்: ரயில்வே கேட் கீப்பருக்கு நோட்டீஸ்
சமூக வலைதளத்தில் பேட்டி வைரல்: ரயில்வே கேட் கீப்பருக்கு நோட்டீஸ்
சமூக வலைதளத்தில் பேட்டி வைரல்: ரயில்வே கேட் கீப்பருக்கு நோட்டீஸ்
ADDED : ஜூலை 10, 2025 11:30 PM
கடலுார்: செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவத்தை தொடர்ந்து புதிதாக போடப்பட்ட கேட் கீப்பருக்கு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பாசஞ்சர் ரயில், பள்ளி வேன் மீது மோதியதில் 3 மாணவர்கள் இறந்தனர். காயமடைந்த 10ம் வகுப்பு மாணவர் விஸ்வேஸ் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
ரயில் விபத்தில் தொடர்புடைய கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்றவுடன் 'கிராம மக்கள், தனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. தன்னிச்சையாக எப்படி கருத்து கூறலாம் என விளக்கம் கேட்டு அவருக்கு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.