/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., மாணவர் அணி பதவிகளுக்கு இன்று 22ம் தேதி நேர்க்காணல்
/
தி.மு.க., மாணவர் அணி பதவிகளுக்கு இன்று 22ம் தேதி நேர்க்காணல்
தி.மு.க., மாணவர் அணி பதவிகளுக்கு இன்று 22ம் தேதி நேர்க்காணல்
தி.மு.க., மாணவர் அணி பதவிகளுக்கு இன்று 22ம் தேதி நேர்க்காணல்
ADDED : நவ 22, 2024 06:12 AM
கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணிக்கு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி ,பேரூர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு நேர்காணல் வரும் 22ம் தேதி நடக்கிறது.
இது குறித்து அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் அறிக்கை:
கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணிக்கு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணல், வரும் 22ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணிக்கு , கடலுார் மாநகர தி.மு.க., அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., நேர்காணலை நடத்த உள்ளார். உடன் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, மாணவரணி இணை செயலாளர் மோகன், மாணவரணி துணை செயலாளர் பி.எம்.ஆனந்த் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆகவே மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் உரிய ஆவனங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் சம்பந்தப்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் விண்ணப்பம் செய்தவர்கள் கலந்து கொள்வதற்கு உரிய ஏற்பாடு செய்து, தாங்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.