ADDED : பிப் 15, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள் சார்பில் நடத்தப்படும் யோகா, உடற்பயிற்சி மற்றும் தியான வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புவனகிரி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் காலை 6:00 முதல் 7.00 வரை ஆண்களுக்கு யோகா உடற்பயிற்சியும், 10 வயது முதல் 15 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் 12:00 வரை உடற்பயிற்சி மற்றும் தியானமும், பெண்களுக்கு வாரம் தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 5:00 மணி முதல் 6:00 வரை உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என, மனவளக்கலை மன்ற அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

