ADDED : ஏப் 30, 2025 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; மதுராந்தகத்தில் மே 5ம் தேதி நடக்கும் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில், வணிகர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென, விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்க தலைவர் கோபு அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஆண்டுதோறும் மே 5ம் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும் மே 5ம் தேதி மதுராந்தகத்தில் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு நடக்கிறது. அதில், அனைத்து வர்த்தகர்களும், தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், அனைத்து பிரிவு துணை சங்கத்தினர் தங்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.