/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டா வழங்கியதில் முறைகேடு திட்டக்குடியில் திடீர் மறியல்
/
பட்டா வழங்கியதில் முறைகேடு திட்டக்குடியில் திடீர் மறியல்
பட்டா வழங்கியதில் முறைகேடு திட்டக்குடியில் திடீர் மறியல்
பட்டா வழங்கியதில் முறைகேடு திட்டக்குடியில் திடீர் மறியல்
ADDED : ஜன 09, 2025 12:44 AM
திட்டக்குடி; திட்டக்குடியில் மனைப்பட்டா வழங்கியதில் முறைகேடு உள்ளதாக கூறி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திட்டக்குடி நகராட்சி மணல்மேடு மற்றும் எழுத்துார் திடீர்குப்பம், நரசிங்கமங்கலம் கிராமங்களில் வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, த.வா.க., பிரமுகர் சுரேந்தர் தலைமையில் பா.ம.க., வடக்கு ஒன்றிய செயலாளர் கோபி உட்பட 30க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை தாசில்தாரிடம் மனு கொடுக்க வந்தனர். தாசில்தார் இல்லாததால் மாலை 5:00 மணியளவில் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தெய்வசிகாமணி மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.
மாலை 6:15 மணியளவில் தாசில்தார் அந்தோணிராஜ், முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். அதையேற்று, இரவு 7:00 மணியளவில் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

