/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாசன வாய்க்கால் துார்வாரும் பணி ஆய்வு
/
பாசன வாய்க்கால் துார்வாரும் பணி ஆய்வு
ADDED : மே 12, 2025 12:13 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டு பாசன துார்வாரும் பணியை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கீழ்கொள்ளிடம் உப வடிநில திட்டத்தில், சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டு பாசன வாய்க்கால்கள், வீராணம் ஏரி உபரி நீர் வெளியேறும் வடிகால் பாழ்வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மரியசூசை, வெள்ளாறு அணைக்கட்டு பாசன பழைய முரட்டு வாய்க்கால், கிளாங்காடு வாய்க்கால், வீராணம் ஏரி உபரி நீர் வடிந்து செல்லும் பாழ்வாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் துார்வாரும் பணியை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
உதவி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், கொளஞ்சி, சரவணன், வெள்ளாறு பாசன பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான் உடனிருந்தனர்.