/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தொகுதி 'கை' க்கு மாறுகிறதா? தலைமை முடிவால் தி.மு.க., வினர் 'ஷாக்'
/
கடலுார் தொகுதி 'கை' க்கு மாறுகிறதா? தலைமை முடிவால் தி.மு.க., வினர் 'ஷாக்'
கடலுார் தொகுதி 'கை' க்கு மாறுகிறதா? தலைமை முடிவால் தி.மு.க., வினர் 'ஷாக்'
கடலுார் தொகுதி 'கை' க்கு மாறுகிறதா? தலைமை முடிவால் தி.மு.க., வினர் 'ஷாக்'
ADDED : அக் 08, 2025 12:11 AM
மாவட்டத்தின் தலைநகரம் கடலுார். இத்தொகுதியில், கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அய்யப்பன் வெற்றி பெற்றார். 2011 மற்றும் 2016ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் வெற்றி பெற்றார்.
கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் அய்யப்பன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொகுதியில் தி.மு.க.,-அ.தி.மு.க., என மாறி மாறி வெற்றி பெற்று வந்துள்ளது. எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் கடலுார் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக புதுப்பாளையம் சீத்தாராம் நகரில் தனி அலுவலகம் திறந்து தேர்தல் பணிகளை முன்கூட்டிய துவக்கியுள்ளார். ஆனால், ஆளுங்கட்சியான தி.மு.க., வில் கோஷ்டி பூசல் காரணமாக யாருக்கு சீட் கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது.
சிட்டிங் எம்.எல்.ஏ., அய்யப்பனின் மகன் டாக்டர் பிரவீன் அய்யப்பன் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வமாக உள்ளார். இவர் மட்டுமின்றி வார்டு கவுன்சிலர் தேர்தலில் தோல்வியை தழுவிய நபர், அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் சீட் கேட்டு வருகிறார்.
இந்த பிரச்னையே வேண்டாம்...என கடலுார் தொகுதியை காங்., கட்சிக்கு விட்டு கொடுத்து விடலாமா என தி.மு.க., தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது, ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்கிற கதையாக உள்ளது.