/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்க புது 'டெக்னிக்'
/
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்க புது 'டெக்னிக்'
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்க புது 'டெக்னிக்'
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்க புது 'டெக்னிக்'
ADDED : அக் 08, 2025 12:12 AM
பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ் பெற அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதை தடுக்க சான்றிதழ்கள் முழுவதும் ஆன் லைனில் விண்ணப்பித்து பெறும் வசதி நடைமுறையில் உள்ளது.
சிலர் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி பொதுமக்களிடம் 'டிரிக்காக' பேசி பணத்தை கறந்துவிடும் நிலை அதிகரித்து வருகிறது.
அதாவது, மாவட்டத்தில், பதிவுத்துறை அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போது, அதற்கு ஊழியர்கள் பிறப்பு சான்றிதழுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று முதலில் தகவல் கூறி விடுகின்றனர்.
ஆனால், அதற்குரிய பணம் எப்படி, எந்த கணக்கில் செலுத்துவது போன்ற விவரங்கள் எதுவும் கூறுவதில்லை. மீண்டும் திரும்பி வந்து அதே ஊழியரிடம் விவரம் கேட்கும் போது, ஏற்கனவே ஒருவர் பிறப்பு சான்றிதழ் பெற பணம் செலுத்தி கேன்சல் செய்து விட்டு சென்ற ரசீது உள்ளது.
உங்களுக்கு வேண்டுமானால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்களும் வரிசையில் நின்று பணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று 'நைசாக' பேசுகின்றனர். சான்றிதழ் கொடுப்பவர்களாச்சே என நம்பி விண்ணப்பித்தவர்கள் பணத்தை 500, 800 என கேட்ட தொகையை தந்து விடுகின்றனர்.
அதில் எவ்வளவு அரசுக்கு செலுத்தினார்கள். அல்லது செலுத்தாமலேயே விட்டுவிடுவார்களா என தெரியாது. பணத்தை பெற்றுக்கொண்டு சான்றிழ் கொடுக்கின்றனர். இப்படியும் லஞ்சம் வாங்க சூப்பர் ஐடியா.