ADDED : பிப் 14, 2024 03:26 AM
கடலுார் மாவட்டடத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் முதல் டிரைவர், கண்டக்டர்கள், ஊழியர்கள் வரையில், கடந்த 2022 டிசம்பரில், 200 க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றனர். ஆனால், இதுவரையில் பணி ஒய்வின்போது கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் ஏதும் கிடைக்கவில்லை என, புலம்பி தீர்க்கின்றனர். பிடித்த செய்யப்பட்ட வருங்கால வைப்பு தொகையை கூட வழங்காததால் படிப்பு செலவு, வீடு கட்டுதல், திருமண செலவுகள் ஆகியவற்றுக்கான கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பென்ஷன் பணத்தில் இருந்து கடன் வசதி பெற விண்ணப்பித்தும், இதுவரை கடன் வழங்கவில்லை. இப்படி இருந்தால், பணி ஓய்வு பெற்ற காலத்தில், எங்ளுக்கு சேர வேண்டிய பணப்பலன்களை வழங்காமல், நன்றாக பணி செய்ததற்கான சான்றிதழ் மட்டும் வழங்கினால், அதை வைத்து நாங்கள் என்ன செய்வது என, புலம்பி தீர்க்கின்றனர்.

