/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு
/
ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு
ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு
ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 27, 2025 11:02 PM
கடலுார் : தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பித்து பயன்பெறலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில், அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் கடலுார், கடலுார் (மகளிர்), நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில், வேப்பூர், மங்களுர் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-2026ம் ஆண்டு சேர்க்கை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நடக்கிறது. இதற்காக கடந்த 19ம் தேதி முதல் வரும் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற்பிரிவு விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும்.
அனைத்து அரசு தொழிற் பயிற்சி நிலையங்களிலும் இலவசமாக விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.
விண்ணப்பிக்க தேவையான ஆதார் அட்டை, கல்வி சான்றுகள் (8 மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்), வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் போட்டோ தேவை.
மேலும் விபரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.
மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்க்கை பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.