/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெ., சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு
/
ஜெ., சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு
ADDED : பிப் 21, 2024 06:48 AM
வடலுார் : நெய்வேலியில், ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என, அ.தி.மு.க., கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகில் நாளை (22ம் தேதி) நடக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்து வைத்து சிறப்புரையற்றுகிறார். விழாவில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் , இந்நாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
.பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கடலூர் தெற்கு மாவட்ட எல்லையான பணிக்கன்குப்பத்தில் நடைபெறும் வரவேற்பிலும், சிலை திறப்பு விழாவில் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கேட்டுக்கொள்கிறேன்.

