/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பு.முட்லுாரில் ஜெ., நினைவு தினம் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
பு.முட்லுாரில் ஜெ., நினைவு தினம் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
பு.முட்லுாரில் ஜெ., நினைவு தினம் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
பு.முட்லுாரில் ஜெ., நினைவு தினம் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : டிச 06, 2024 07:11 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
பு.முட்லுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத் தலைவர் ெரங்கசாமி தலைமை தாங்கிானர். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், அமைப்பு செயலாளர் முருகுமாறன், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட துணைச் செயலாளர்கள் செல்வம், தேன்மொழி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெ., படத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.