/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'ஜாக்டோ - ஜியோ ' கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
'ஜாக்டோ - ஜியோ ' கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 09, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அரிகிருஷ்ணன், மணவாளன், மணிவண்ணன், தனசேகர், சாந்தகுமார், அம்பேத்கர் முன்னிலை வகித்தனர்.
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பான ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்வு அவசியம் என்பதை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தொடர்ந்து கலெக்டரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.