/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2025 07:52 AM

கடலுார்: கடலுாரில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுாரில் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட் டம் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள், கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தகுமார், மணவாளன் முன்னிலை வகித்தனர்.
இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்; ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

