/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜாக்டோ-ஜியோ அமைப்பு உண்ணாவிரத போ ராட்டம் கடலுாரில் உண்ணாவிரதம்
/
ஜாக்டோ-ஜியோ அமைப்பு உண்ணாவிரத போ ராட்டம் கடலுாரில் உண்ணாவிரதம்
ஜாக்டோ-ஜியோ அமைப்பு உண்ணாவிரத போ ராட்டம் கடலுாரில் உண்ணாவிரதம்
ஜாக்டோ-ஜியோ அமைப்பு உண்ணாவிரத போ ராட்டம் கடலுாரில் உண்ணாவிரதம்
ADDED : டிச 14, 2025 06:18 AM

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மணவாளன், அம்பேத்கர், தனசேகரன், சாந்தகுமார், மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி துவக்க உரையாற்றினார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெகநாதன் கண்டன உரையாற்றினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், அனைத்து துறை கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன், அறிவழகன், முன்னாள் மாநில துணைத் தலைவர் நல்லதம்பி பேசினர். மாநில தலைவர் அருள்பிரகாசம் நிறைவுரையாற்றினார்.
இதில், கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு, அரசு பணியில் சேர்ந்தோருக்கு, பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பல்வேறு துறைகளில், 30 சதவீதத்துக்கு மேல் காலியாக உள்ள, பணியிடங்களை நிரப்ப வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.