/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் கடலுாரில் அமைச்சர்கள் பங்கேற்பு
/
மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் கடலுாரில் அமைச்சர்கள் பங்கேற்பு
மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் கடலுாரில் அமைச்சர்கள் பங்கேற்பு
மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் கடலுாரில் அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : டிச 14, 2025 06:17 AM

கடலுார்: கடலுாரில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் விழா நடந்தது.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் நடந்த விழாவி்ல் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் 41,055 குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான ஏ.டி.எம்.கார்டு வழங்கினர்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், மேயர் சுந்தரிராஜா முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், ' கடலுார் மாவட்டத்தில் 23.74 கோடி மகளிர் கட்டணமில்லாமல் பஸ்சில் பயணம் செய்துள்ளனர். கடலுார் மாவட்டத்தில் 4,50,134 குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை கோரி 95,362 மனுக்கள் வரப்பெற்றது. இதில் கலைஞர் மகளிர் திட்டம் விரிவாக்கத்தின் மூலம் 41,055 பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது' என்றார்.
அமைச்சர் கணேசன் பேசுகையில்,' முதல்வர் ஸ்டாலின், பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளியில் பயின்ற பெண் குழந்தைகள் உயர்கல்வி பயில ஏதுவாக மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் கடலுார் மாவட்டத்தில் 39,828 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்'என்றார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி, எஸ்.பி., ஜெயக்குமார், துணை மேயர் தாமரைச்செல்வன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கமணி, ஆர்.டி.ஓ., சுந்தரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

