/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் ஜமுனா சர்க்கஸ்: ஆச்சர்யமூட்டும் சாகசங்கள்
/
கடலுாரில் ஜமுனா சர்க்கஸ்: ஆச்சர்யமூட்டும் சாகசங்கள்
கடலுாரில் ஜமுனா சர்க்கஸ்: ஆச்சர்யமூட்டும் சாகசங்கள்
கடலுாரில் ஜமுனா சர்க்கஸ்: ஆச்சர்யமூட்டும் சாகசங்கள்
ADDED : ஜன 16, 2024 06:39 AM

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்து வரும் ஜமுனா சர்க்கசில் கலைஞர்களின் சாசகங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
முதன் முறையாக ஆப்பிரிக்க நாட்டு கலைஞர்கள் பங்கேற்றுள்ள ஜமுனா சர்க்கஸ் கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்து வருகிறது. 130 ஆண்டுகள் பழமையான இந்த சர்க்கசில் 60 அடி உயரத்தில் கயிற்றில் லாவகமாக பறந்து ஒருவரையொருவர் பிடிக்கும் சாகசம், மரண கூண்டுக்குள் தலை கீழாக பைக் ஓட்டுவது, சைக்கிள் சாகசம், ரிங் டான்ஸ், ஆப்பிரிக்க நாட்டு கலைஞர்கள் உடலை வில்லாக வளைத்து தீயுடன் கூடிய நடனம் போன்ற சாகசங்கள் இடம் பெற்றுள்ளது.
சிறுவர்களை குஷிப்படுத்தும் ஒட்டகம், குதிரை, நாய்களின் பல விதமான சாகசங்கள், ஜோக்கர்கள் செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
சர்க்கஸ் தினமும் மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 என 3 காட்சிகள் நடக்கிறது.
கலைஞர்களின் மிரள வைக்கும் சாகசங்களை சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.