/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜான்டூயி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அசத்தல்
/
ஜான்டூயி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அசத்தல்
ADDED : மே 10, 2025 12:14 AM

பண்ருட்டி: பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது.
பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் சுதர்சனராஜன் 600க்கு 590 மதிப்பெண், பிரபாகர் 589, விஷ்ணுசெல்வன் 587, சஞ்சைஸ்ரீனிவாஸ் 585 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முறையே முதல் ௪ இடங்களை பிடித்தனர்.
8 மாணவர்கள் 580 மதிப்பெண்ணுக்கு மேல், 55 பேர் 550 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை படைத்தனர். வேதியியல் பாடத்தில் 9 பேர், கணித பாடத்தில் 7 பேர், கணினி அறிவியல் பாடத்தில் 8 பேர், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4 பேர், உயிரியியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
தமிழ் பாடத்தில் 13 பேர், ஆங்கிலத்தில் 2 பேர் 100க்கு 99 மதிப்பெண் பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் வீரதாஸ், முதுநிலை முதல்வர் வாலண்டினாலெஸ்லி, இணை செயலாளர் நிட்டின்ஜோஸ்வா, முதல்வர் மணிகண்டன், தலைமை ஆசிரியர் கனகராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.