/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயலட்சுமி கார்டன் புதிய மனைப்பிரிவு துவக்கம்
/
ஜெயலட்சுமி கார்டன் புதிய மனைப்பிரிவு துவக்கம்
ADDED : நவ 17, 2024 02:52 AM

கடலுார்: சி.கே.ஆர். குரூப்ஸ் சார்பில், பண்ருட்டி அரசூர் தேசிய நெடுஞ்சாலை, மனம் தவிழ்ந்த புத்துாரில் ஜெயலட்சுமி கார்டன் என்ற புதிய மனைப்பிரிவு துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி திருசங்கு, துணைத் தலைவர் முன்னிலை வகித்தனர்.
சின்னத்திரை நடிகை ஸ்ருதி பங்கேற்று, ஜெயலட்சுமி கார்டன் மனைப்பிரிவின் பெயர் பலகையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். உரிமையாளர்கள் கோவிந்தன், ரமேஷ், ராமமூர்த்தி, ராஜசேகரன், முத்துக்குமரன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
மனைப்பிரிவு குறித்து உரிமையாளர்கள் கூறுகையில், தமிழக அரசின் டி.டி.சி.பி., மற்றும் ரெரா அங்கீகாரம் பெற்றது. மனைப்பிரிவில் 30, 24, 23 அடி அகல தார்சாலை வசதி, மனைப்பிரிவை சுற்றி உயரமான மதிற்சுவர், மின்இணைப்பு மற்றும் மனைப்பிரிவு முழுவதும் தெருவிளக்கு வசதி, 18அடியில் சுவையான நிலத்தடி குடிநீர் வசதி, மனைப்பிரிவின் அருகிலேயே அரசுப்பள்ளி, கல்லுாரி, வங்கி, பெட்ரோல் நிலையம் உள்ளது.
ஒரு சதுரஅடி மனையின் விலை ரூ. 390 முதல் துவங்குகிறது. 15 நாட்களுக்குள் மனையை கிரயம் செய்பவர்களுக்கு பத்திரப்பதிவு முற்றிலும் இலவசம். தேசிய நெடுஞ்சாலையொட்டி, மனைப்பிரிவு அமைந்துள்ளதால் மனையின் மதிப்பு விரைவிலேயே பன் மடங்கு உயரும் என்றனர்.