/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழ் எழுத்து வடிவில் நின்று ஜெயப்பிரியா மாணவர்கள் அசத்தல்
/
தமிழ் எழுத்து வடிவில் நின்று ஜெயப்பிரியா மாணவர்கள் அசத்தல்
தமிழ் எழுத்து வடிவில் நின்று ஜெயப்பிரியா மாணவர்கள் அசத்தல்
தமிழ் எழுத்து வடிவில் நின்று ஜெயப்பிரியா மாணவர்கள் அசத்தல்
ADDED : பிப் 23, 2024 12:16 AM

மந்தாரக்குப்பம்: உலக தாய்மொழி தினத்தையொட்டி தமிழ் எழுத்து வடிவில் நின்று ஜெயப்பிரியா வித்யாலாயா பள்ளி மாணவர்கள் சாதனையில் ஈடுபட்டனர்.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தாய் மொழியாகிய தமிழின்பெருமையை போற்றும் வகையில் விருத்தாச்சலம் ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும பள்ளி மாணவர்கள் 600க்கும் மேற்பட்டோர் தமிழ் எழுத்து வடிவில் நின்று, 50 க்கும் மேற்பட்ட திருக்குறள்களை சொல்லி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
நமது தாய் மொழியாகிய தமிழின் பெருமையை உலகமெங்கும் பரப்ப வேண்டும், இளம் வயதிலேயே தமிழின் மீது மாணவர்களுக்கு பற்றும் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.