ADDED : ஏப் 23, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயம் மற்றும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளுக்காக விவசாயிகள் வங்கிகளில் நகையை வைத்து கடன் பெறுவது வழக்கம்.
அதிலும் அதிகமாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி போன்றவற்றில் வாங்குவதையே விவசாயிகள் விருப்பம் காட்டுவர். ஒவ்வொரு தேர்தலின் போதும், நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வாக்குறுதியாக அளிக்கப்பட்டு வருவதால் வரும் தேர்தலில் தள்ளுபடி அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே உள்ளது. தேர்தல் வரப்போகுது, நகைக்கடன் தள்ளுபடி ஆகப்போகுது என்ற கனவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.