/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் 30ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
/
பெண்ணாடத்தில் 30ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஆக 26, 2025 11:57 PM
கடலுார் : பெண்ணாடத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிக்காட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 30ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் பெண்ணா டம் லோட்டஸ் இன்டர் நேஷனல் பள்ளியில் வரும் 30ம் தேதி நடக்கிறது. முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது.
முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
முகாமிற்கு வருபவர்கள் தங்களின் பாஸ்போட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புடன் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். அல்லது 9499055907, 9499055908 மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.