ADDED : மே 02, 2025 05:26 AM

கடலுார்: கடலுாரில் அனைத்து அரசியல் கட்சிகள், குடியிருப்போர் நல சங்கம் மற்றும் கடலுார் மாநகர பொதுநல இயக்கங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வி.சி.,அமைப்பு செயலாளர் திருமார்பன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாத வன், மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன், காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் திலகர், ராமராஜன், ம.தி.மு.க., குமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரகீம், குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் மருதவாணன், தலைவர் பச்சையப்பன், பொருளாளர் ரமணி, திருப்பாதிரிப்புலியூர் வியாபாரிகள் சங்கம் பக்கீரான், செல்லப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். கடலுாரில் தற்போதுள்ள பஸ் நிலையத்தை விரிவு படுத்தி நவீனப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 13ம் தேதி கடலுார் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.