/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுவட்ட போட்டிகளில் கலைமகள் பள்ளி வெற்றி
/
குறுவட்ட போட்டிகளில் கலைமகள் பள்ளி வெற்றி
ADDED : செப் 25, 2025 03:47 AM

சிதம்பரம் : குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற கலைமகள் பள்ளி மாணவர்களை கல்விக்குழும தலைவர் முத்துக்குரன் பாராட்டி பரிசு வழங்கினார்.
காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளி மாணவ, மாணவிகள் குறுவட்ட அளவில் நடைபெற்ற கபடி, கால்பந்து, ஹாக்கி, இறகுபந்து, வலைபந்து, சதுரங்கம், குண்டு எரிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட 16 போட்டிகளில் பங்கேற்று விளையாடினர். மேலும் தமிழக முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்று விளையாடினர்
இதில் அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற கலைமகள் பள்ளி மாணவ, மாணவிகளை கல்விக்குழும தலைவர் முத்துக்குமரன் பாராட்டினார். அப்போது தாளாளர் பரணிதரன், முதல்வர் சஞ்சய்காந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் கண்மணி, மூவேந்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.