/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தவ அமுதம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்
/
தவ அமுதம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்
ADDED : ஜூலை 17, 2025 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
பள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் சாலை கனகதாரன் முன்னிலை வகித்தார். முதல்வர் புனிதவள்ளி வரவேற்றார். விழாவில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, லயன்ஸ் கிளப் மற்றும் நாளா கிளப் சார்பில் அரசு துவக்கப் பள்ளிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் இனிப்புகள் வழங்கப்பட்டது.
லயன்ஸ் கிளப் தலைவர் குமரேசன், செயலாளர் இளஞ்செழியன்,பொருளாளர் ராமச்சந்திரன், நாளா கிளப் தலைவர் அருள்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.