/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காமராஜர் பிறந்த நாள்: காங்., நலத்திட்ட உதவி
/
காமராஜர் பிறந்த நாள்: காங்., நலத்திட்ட உதவி
ADDED : ஜூலை 14, 2025 05:31 AM

கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், முன்னாள் முதல்வர் காமராஜர், சுதந்திரா போராட்ட தியாகி கக்கன், எம்.பி., விஷ்ணுபிரசாத், முன்னாள் காங்., மாநிலத் திருநாவுக்கரசர் ஆகியோர் பிறந்த நாள் விழா நடந்தது.
காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமை தாங்கி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சேவாதள காங்., மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, மாநில பேச்சாளர் மோகன்தாஸ், இளைஞர் காங்., முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கலையரசன், மாவட்டத் துணைத் தலைவர் பாண்டுரங்கன், மீனவர் பிரிவு மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி தலைவர் தரணிதரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரஹீம், ஓ.பி.சி., பிரிவு மாநில செயலாளர் ராமராஜ், இளைஞர் காங்., மத்திய மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், ஆறுமுகம், அன்பழகன், ராஜாராம், தர்மதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.