ADDED : ஜூலை 18, 2025 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையம் ஸ்ரீலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் லட்சுமிகிருஷ்ணா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எக்ஸ்னோரா தலைவர் பசுபதி கலந்து கொண்டு பேசினார்.
இதில் காமராஜர் கவிதைகள் வாசித்த சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர் பங்கேற்றனர்.