/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமரக்கடவுள் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
/
குமரக்கடவுள் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
ADDED : நவ 03, 2024 04:44 AM

கடலுார்: கடலுார் அடுத்த கே.என்.பேட்டை குமரக்கடவுள் கோவிலில் 51வது கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் அடுத்த கே.என்.பேட்டையில் செங்குந்த மரபினருக்கு சொந்தமான வள்ளி தேவசேனா சமேத குமரக்கடவுள் கோவிலில் 51வது ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கோவில் நிர்வாகிகள், ஆலய குருக்கள் சபரிகிரீசன் முன்னிலையில் நடந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தினமும் காலை வீதியுலா நடக்கிறது. 6ம் தேதி இரவு வேல் வாங்குதல் உற்சவம், 7ம் தேதி மதியம் 1:00 மணிக்கு கந்த சஷ்டி மகா அபிஷேகம், இரவு வீரபாகு துாது, சூரசம்ஹாரம் நடக்கிறது.
8ம் தேதி இரவு திருக்கல்யாணம், 9ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 10ம் தேதி இரவு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.