/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கவர்னர் வேண்டவே வேண்டாம்; கனிமொழி எம்.பி., திட்டவட்டம்
/
கவர்னர் வேண்டவே வேண்டாம்; கனிமொழி எம்.பி., திட்டவட்டம்
கவர்னர் வேண்டவே வேண்டாம்; கனிமொழி எம்.பி., திட்டவட்டம்
கவர்னர் வேண்டவே வேண்டாம்; கனிமொழி எம்.பி., திட்டவட்டம்
ADDED : ஜன 12, 2025 05:13 AM
கடலுார் : கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு நேற்று நடந்தது. இதில், தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., பங்கேற்றார். முன்னதாக அவர், கடலுாரில் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறிய மாவட்டங்களில் கூட தொழில் வளர்ச்சி பெருக வேண்டும் என்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் பல இடங்களில் டைடல் பார்க் உருவாக்கப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட கடலுார் மாநகராட்சியிலும் தொழில் வளர்ச்சி விரைவில் உருவாக்கப்படும். கடலுார் மாவட்டத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் எதையும் விட்டுக் கொடுக்காமல் கேட்டு பெறுகிறார்.
சில பேருக்கு தனது முகவரி காணாமல் போய்விட்டது என்று தெரிகிறது. இதற்கு யாரை விமர்சித்தால் தன்னை பற்றி பேசுவார்கள் என்று தெரிந்து கொண்டு எதையும் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றனர்.
யாரால் தனக்கு இந்த உயர்வு கிடைத்திருக்கிறது; தனக்கு படிக்கவோ, வாய்ப்புகள் கிடைக்கவோ திராவிட இயக்கம் என்னென்ன தியாகங்கள் செய்திருக்கிறது என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் சிலர் பேசுகின்றனர். அவர்களின் எஜமானர்களுக்கு அடிபணிந்து இதுபோன்று பேசுகின்றனர்.
தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் மோதல் போக்கு உள்ளது. இதற்கு தீர்வு காண, கவர்னர் வேண்டாம் என முதலில் இருந்தே கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, அமைச்சர் பன்னீர்செல்வம் உடனிருந்தார்.

