/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிேஷகம்
/
கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிேஷகம்
ADDED : மே 17, 2025 12:29 AM

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கணபதி நகர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
மந்தாரக்குப்பம் கணபதி நகர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், மாலை 6:00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம், சகஸ்கரநாம அர்ச்சனை, மூலமந்திர ேஹாமம், மஹா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
பின், கடம் புறப்பாடு துவங்கி 9:30 மணிக்கு கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை நெய்வேலி கன்னிகா பரமேஸ்வரி ஆலயம், ஆரிய வைசிய சமாஜம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்