/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மிராளூரில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
/
மிராளூரில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
மிராளூரில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
மிராளூரில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : செப் 21, 2024 06:37 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
அரசு பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ஊராட்சி தலைவர் தமிழ்செல்விபரமேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் புஷ்பராணி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தி.மு.க., புவனகிரி ஒன்றிய செயலாளர் மதியழகன் குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், அருண்குமார், ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மக்களை தேடி மருத்துவ நல அலுவலர் சேதுராமன் வாழ்த்துரையாற்றினார். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், முதியவர்களுக்கு மருந்து மாத்திரைகள், சத்துமாத்திரைகள் வழங்கினர். முகாமில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கமலக்கண்ணன், மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சுகாதார ஆய்வாளர் ரவிவர்மன் நன்றி கூறினார்.