/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் குரலில் பேசி மோசடி காரைக்குடி ஆசாமி கைது
/
பெண் குரலில் பேசி மோசடி காரைக்குடி ஆசாமி கைது
ADDED : ஆக 21, 2024 04:51 AM

கடலுார் : நெய்வேலி வியாபாரியிடம், பெண் குரலில் பேசி ரூ.1.60 லட்சம் அபகரித்த காரைக்குடி ஆசாமியை, கடலுார் போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் 12ஐ சேர்ந்தவர் ராஜ்மோகன். தீயணைப்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கு 4 ஆண்டிற்கு முன் பேஸ்புக் மூலம் வாசுகி பாண்டியன் என்பவர் அறிமுகமானார்.
பின்னர் நண்பர்களாக மொபைல் போனில் அடிக்கடி பேசி வந்தனர். வாசுகி பாண்டியன், தனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவுக்கு ரூ.1,60 லட்சம் தேவைப்படுகிறது என, ராஜ்மோகனிடம் கேட்டார்.
அதனை நம்பிய ராஜ்மோகன், தனது வங்கி கணக்கில் இருந்து வாசுகிபாண்டியன் வங்கி கணக்கிற்கு ரூ.1.60 லட்சத்தை அனுப்பினார்.
அதன்பிறகு வாசுகி பாண்டியனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜ்மோகன் அளித்த புகாரின் பேரில், கடலுார் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கோட்டையூரை சேர்ந்த ராஜாசிம்மன்,40; இவர் பேஸ்புக் உள்ளிட்ட வலை தள புரோபைலில், அழகிய பெண் படத்தை வைத்து, பெண் குரலில் பேசி பலரை ஏமாற்றி ராஜ்மோகனிடமும் ரூ.1,60 லட்சம் ஏமாற்றியது தெரிய வந்தது.
அதன்பேரில், கரூரில் பதுங்கி இருந்த ராஜாசிம்மனை கடலுார் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட் 3ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

