/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழையால் வெறிச்சோடிய காராமணிக்குப்பம் சந்தை
/
மழையால் வெறிச்சோடிய காராமணிக்குப்பம் சந்தை
ADDED : ஜன 09, 2024 06:51 AM

நெல்லிக்குப்பம் : மழையால் பொதுமக்கள் வராதாதல் காராமணிக்குப்பம் சந்தை வெறிச்சோடி காணப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக அதே பகுதியில் கடலுார் பண்ருட்டி சாலையை ஒட்டி 6 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கும்.
நேற்று அதிகளவு கருவாடு விற்பனைக்கு வந்திருந்தது.அதேபோல் காய்கறிகள் விற்பனைக்காக 100 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மழையையும் பொருட்படுத்தாமல் கடைகள் போட்டிருந்தனர். தொடர்ந்து மழை பெய்தததால் சந்தை நடக்கும் இடம் முழுவதும் சேறும் சகதியுமாக இருந்ததால் கருவாடு விற்பனை டல்அடித்தால் வியாபாரிகள் திருப்பி எடுத்து சென்றனர்.
அதேபோல் ஒரு கிலோ தக்காளி,20,வெங்காயம்,20 ரூபாய் என அனைத்து காய்கறிகளும் வெளிமார்க்கெட்டை விட குறைவான விலைக்கே விற்பனையானது.காய்கறிகள் விலை குறைவாக இருந்தும் மழையால் மக்கள் வராததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கம் போல் இல்லாமல் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.