/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி., சீயோன் பள்ளியில் கராத்தே போட்டி
/
எஸ்.டி., சீயோன் பள்ளியில் கராத்தே போட்டி
ADDED : செப் 01, 2025 11:23 PM

சேத்தியாத்தோப்பு: வடலுார் எஸ்.டி., சீயோன் பள்ளியில் ஒகினோவோ கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் கராத்தே பயிற்சி முடித்தவர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி முதல்வர் இவான்சிபிரவின் தலைமை தாங்கினார். ஷர்மா, உடற்கல்வி ஆசிரியர் சத்யராஜ் முன்னிலை வகித்தனர். கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் ராஜேந்திரன் வரவேற்றார். தாளாளர் சாமுவேல்பிரவின், பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெகன், பெஞ்சமின், சீனிவாசன் ஆகியோர் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பெல்ட் , சான்றிதழ் வழங்கினர்.
விழாவில், கராத்தே பயிற்சியாளர்கள் இளவரசன், சத்யராஜ், சத்தியமூர்த்தி, ரவிக்குமார், ஆசிரியை அன்புராணி, உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யா, ராசாத்தி, மணிகண்டன், அன்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.