UPDATED : அக் 14, 2026 03:56 PM
ADDED : அக் 14, 2026 03:54 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட அனைத்து ஸ்டைல் கராத்தே மாஸ்டர்கள் அசோசியேஷன் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. அசோசியேஷன் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி பேசினார். தலைமை பயிற்சியாளர்கள் வாசுதேவன், சிகாமணி முன்னிலை வகித்தனர். மூத்த பயிற்சியாளர்கள் நாராயணன், ராமலிங்கம், குமரகுரு வாழ்த்தி பேசினர். பயிற்சியாளர்கள் ஆறுமுகம், வனிதா கண்ணதாசன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
அசோசியேஷன் செயலாளர் ராஜேஷ் சங்கத்தின் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கராத்தே மாஸ்டர்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் உத்திராபதி செய்திருந்தார். பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார்.
