நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கார்த்திகை மாத கடைசி ஞாயிறு முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. இதேபோல், வேடப்பர், ஏகநாயகர், வெண்மலையப்பர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

