/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
கருமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஜன 20, 2025 11:54 PM
கடலுார்; கடலுார், புதுப்பாளையம் மாட்டுப்பட்டித் தெரு கருமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 19ம் தேதி காலை 10:00 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், கோ பூஜையும், மாலை 6:30 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கும்பாபிேஷகம் நடந்தது. கடலுார் சரக மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் பிரகாஷ், மருந்து மொத்த விற்பனை தொழிலாளர்கள் சங்க தலைவர் ரவி, செயலாளர் சுதாகர் மற்றும் உறுப்பினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். பூஜைகளை பெருமாள் செய்திருந்தார். இன்று மாலை 4:00 மணிக்கு மண்டல அபிேஷகம் துவங்குகிறது.