/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
/
நெய்வேலியில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : ஆக 07, 2025 11:53 PM

நெய்வேலி; நெய்வேலியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையிலான நிர்வாகிகள், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 26ல் உள்ள செல்வராசு மன்றத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு வட்டம் 25ல் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, என்.எல்.சி.,- தொ.மு.ச., அலுவலகத்தில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர்.
முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, என்.எல்.சி., - தொ.மு.ச., பொதுச் செயலாளர் குருநாதன், தலைவர் ஞான ஒளி, பொருளாளர் அப்துல் மஜித், அலுவலக செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், சந்தோஷ் குமார், அவைத் தலைவர்கள் வீரராமச்சந்திரன், நன்மாறபாண்டியன், பொருளாளர் ஆனந்த ஜோதி, மாவட்ட பிரதிநிதிகள் ஜெகநாதன், வெங்கடேசன், ஒன்றிய துணை செயலாளர்கள் சுமதி நந்தகோபால், ஏழுமலை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜேஷ், சதாம், நகர பொருளாளர் மதியழகன், துணை செயலாளர்கள் செந்தில்குமார், கருப்பன், மாவட்ட பிரதிநிதிகள், ரவிச்சந்திரன், நாசர், கிளை செயலாளர்கள் அறிவழகன், ஜெயக்குமார் பங்கேற்றனர்.