ADDED : ஆக 08, 2025 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: சிதம்பரம் அடுத்த லால்புரத்தில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் டாக்டர் மனோகர் தலைமை தாங்கி, கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் செந்தில்நாதன், ராமமூர்த்தி, ஆனந்தன், ஒன்றிய நிர்வாகிகள் நடராஜன், அரவிந்த், கோபி வினோத், மணிமாறன், புருஷோத், சஞ்சய், நித்திஷ், கிளை நிர்வாகிகள் சதாசிவம், மகாலிங்கம், உதயகுமார், தங்கசாமி, கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.